Sunday, July 20, 2008

தசாவதாரம் - என் பார்வையில்



படங்களுக்கு சென்று கதை புரியாமல் வந்த கொடுமை உண்டு ஆனால் கதை கவனிக்காமல் வந்த கதை தெரியுமா உங்களுக்கு ? இரண்டு வாரங்களுக்கு முன்னால் தசாவதாரம் பார்த்த பொழுது கமலின் பத்து வேடங்கள்தான் நினைவில் நின்றன. கமலின் சிரத்தை கதை மட்டும் இல்லது திரைகதையிலும் நன்றாகவே தெரிந்தது.


பத்து பத்திரங்கள் இருந்தும் அமெரிக்க வில்லன் பிலேட்சேர் மற்றும் ரெங்கராஜ நம்பியை தவிர்த்து மற்றவர்கள் மனதில் நிற்க மறுக்கிறார்கள். கிருஷ்ணவேணி பாட்டி , ஜப்பானிய குங்பு வீரர், முசல்மான் கபிபுள்ள இவர்கள் காட்சிகளில் உள்ள காலி இடங்களை நிரப்பவே பயன்படிருகிறார்கள் . வின்சென்ட் பாத்திரத்தின் மூலம் குமரி மக்களின் யதார்த்தத்தினை பதிவு செய்திருக்கும் கமலுக்கு ஒரு தனி salute .


12- ஆம் நூற்றாண்டில் தொடங்கும் படத்தில் எப்படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை வளர்கிறதோ அந்த நூலினை அழகாக 20- ஆம் நூற்றாண்டிலும் கொண்டுவந்திருப்பது ரசிக வைத்தது. அது மட்டும் இல்லது, சின்ன சின்ன விஷயங்கள் கமல் காப்பாற் பொது வைணவ சின்னம் பொருந்திய வாகனத்தில் வருவது, ஓடி தபிக்க நினைக்கும் பொழுது சிவ முத்திரை பொருந்திய வாகனங்கள் துரத்துவது என நிரைய சுவாரசியங்களை தந்திருக்கிறார்கள்.


படம் நன்றாகவே இருந்தது. அந்த பிரம்மண்டதிருகவது ஒரு முறை போய் பாருங்கள்.

No comments: